யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் முன்னெடுத்த உண்ணாவிரத போராட்டம் நேற்றைய தினம் சனிக்கிழமையுடன் முடிவுக்கு வந்துள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் 09 பேருக்கு விதிக்கப்பட்டுள்ள வகுப்புத்தடைகளை நீக்க வேண்டும் உள்ளிட்ட 04 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து மாணவ ஒன்றிய பிரதிநிதிகள் பல்கலை கழக முன்றலில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்நிலையில், யாழ் . பல்கலை கழகத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற பேரவை கூட்டத்தில் , மாணவர்களின் கோரிக்கைகள் தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டது.
பின்னர் , உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் , மாணவர்களின் பிரச்சனை தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு, சாதகமாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என பேரவை உறுப்பினர்களால் மாணவர்களுக்கு உறுதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து , மாணவர்கள் தமது போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.