காணொளிக் குறிப்பு,

காஸா: இஸ்ரேல் ராணுவத்தைச் சேர்ந்த 4 பெண் பணயக் கைதிகளை விடுவித்த ஹமாஸ்

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து முதல்கட்டமாக கடந்த ஜனவரி 19ஆம் தேதி மூன்று பணயக் கைதிகளை ஹமாஸ் விடுவித்தது.

தற்போது ஜனவரி 25ஆம் தேதியன்று, மேலும் நான்கு இஸ்ரேலிய பெண் பணயக் கைதிகளை ஹமாஸ் செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைத்தது.

தற்போது விடுவிக்கப்பட்டவர்கள் இஸ்ரேலுக்கு திரும்புகின்றனர். இவர்கள் நால்வரும் இஸ்ரேலிய ராணுவத்தினர் ஆவர்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)