இலங்கை கடவுச்சீட்டுக்கு கிடைத்துள்ள புதிய அங்கீகாரம் !

by guasw2

இலங்கை கடவுச்சீட்டுக்கு கிடைத்துள்ள புதிய அங்கீகாரம் ! on Saturday, January 25, 2025

தெற்காசியாவின் நான்காவது சக்திவாய்ந்த கடவுச்சீட்டாக இலங்கை கடவுச்சீட்டு பெயரிடப்பட்டுள்ளது.

ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டிற்கமைய, இந்த விடயம் தெரியவந்துள்ளது.

2023 ஆம் ஆண்டில் உலகளவில் 100 வது இடத்தில் இருந்த இலங்கை கடவுச்சீட்டு தற்போது 96 வது இடத்தில் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

தற்போது இலங்கை கடவுச்சீட்டு வலுவடைந்து வருவதாக ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டில் தெரியவந்துள்ளது.

2022 ஆம் ஆண்டில் 102வது இடத்தில் இருந்த இலங்கை கடவுச்சீட்டு தொடர்ந்து முன்னேற்றத்தைக் காட்டுவதாகவும் ஹென்லி கடவுச்சீட்டு குறியீடு குறிப்பிட்டுள்ளது.

இலங்கையர்கள் 44 இடங்களுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம்.

தொடர்புடைய செய்திகள்