இன்று கல்முனையில் வெற்றிகரமாக நடைபெற்ற குருதிக்கொடை நிகழ்வு !

by guasw2

இன்று கல்முனையில் வெற்றிகரமாக நடைபெற்ற குருதிக்கொடை நிகழ்வு ! on Saturday, January 25, 2025

கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் 125 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று 25.01.2025 சனிக்கிழமை மாபெரும் இரத்ததான முகாம் ( குருதிக்கொடை ) நடைபெற்றது.

கல்முனை ஆதார வைத்தியசாலையுடன் இணைந்து காலை 8.00 மணி முதல் மாலை 4.30 மணிவரை பாடசாலை வளாகத்தில் இடம் பெற்றது.

ஆரம்ப வைபவம் கல்லூரி அதிபர் அருட் சகோதரர் ரெஜினோல்ட் தலைமையில் நடைபெற்றது.

பிரதம அதிதியாக கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் கலந்து சிறப்பித்தார்.

கௌரவ அதிதியாக கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி மருத்துவர் நடராஜா றமேஸ் மற்றும் விசேட அதிதியாக வைத்தியசாலையின் இரத்த வங்கி பொறுப்பாளர் மருத்துவர் திருமதி பி.எம்.கவிதா கலந்து சிறப்பித்தார்கள்.

கார்மேல் பற்றிமாவின் 125 ஆவது நிறைவு நிகழ்வு நிறைவேற்றுக்குழுவினரும் கலந்து ஒத்துழைத்தனர்.

125 ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் பல நிகழ்வுகள் ஒரு வருடத்திற்கு மாதாந்தம் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

தொடர்புடைய செய்திகள்