பல தடவைகளில் மழை பெய்யும் !

by 9vbzz1

பல தடவைகளில் மழை பெய்யும் ! on Friday, January 24, 2025

ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும். வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும், சில இடங்களில் 50 மில்லிமீற்றர் வரை மழை பெய்யக்கூடும் எனவும் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தெற்கு மாகாணங்களிலும் பதுளை மாவட்டத்திலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமீட்டம் நிறைந்து காணப்படும்

இடியுடன் கூடிய மழையுடன் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க பொதுமக்கள் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்