ஜோகோவிச் விலகல்: ஆஸி. ஓபன் இறுதிப் போட்டியில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ்!

by wamdiness

24 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான நோவக் ஜோகோவிச் வெள்ளிக்கிழமை (24) பிற்பகல் அலெக்சாண்டர் ஸ்வெரேவுக்கு எதிரான அவுஸ்திரேலிய ஓபன் அரையிறுதிப் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.

அவரது இடது காலில் தசைக் கிழிந்ததால் ஆட்டத்தை அவரால் தொடர முடியவில்லை.

உலகின் நம்பர் 2 வீரரான ஸ்வெரேவ் 81 நிமிடத்தில் முதல் செட்டை செட்டை 7-6 (7/5) என்ற கணக்கில் வென்றதன் பின்னர், காயத்தால் 37 வயதான செர்பிய வீரருக்கு ஆட்டத்தை தொடர முடியாது போனது.

பின்னர் ஸ்வெரேவுடன் கைகுலுக்களை மேற்கொண்ட அவர் போட்டியை விட்டுக் கொடுத்து அரங்கிலிருந்து வெளியேறினார்.

இதனால், ஞாயிற்றுக்கிழமை (26) நடைபெறும் அவுஸ்திரேலிய ஓபன் இறுதிப் போட்டியில் ஸ்வெரேவ் விளையாடுவது உறுதியானது.

தனது முதல் அவுஸ்திரேலிய ஓபன் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான ஜானிக் சின்னர் அல்லது நம்பர் 21 பென் ஷெல்டனுக்கு எதிராக அவர் விளையாடுவார்.

போட்டியிலிருந்து ஜோகோவிச் வெளியேறும் போது, ​​ராட் லேவர் அரீனா அரங்கில் இருந்த கூட்டம் அவரை உற்சாகப்படுத்தியது, மேலும் அவர் இரண்டு கட்டைவிரலை உயர்த்தி பதிலளித்தார்.

மெல்போர்ன் பூங்காவில் 11 ஆவது பட்டத்தை வென்று சாதனை படைக்க முயன்ற ஜோகோவிச், வாரத்தின் தொடக்கத்தில் உலக நம்பர் 3 கார்லோஸ் அல்கராஸுக்கு எதிரான காலிறுதி வெற்றியின் போது காயம் அடைந்தார்.

கடந்த 12 மாதங்களில் ஜோகோவிச் காயம் காரணமாக கிராண்ட்ஸ்லாம் போட்டியில் இருந்து வெளியேறுவது இது இரண்டாவது சந்தர்ப்பமாகும்.

கடந்த ஆண்டு பிரெஞ்ச் ஓபனில் காலிறுதியில் காஸ்பர் ரூடுக்கு எதிரான போட்டியில் முழங்கால் பிரச்சினையால் விலகியமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்