தமிழ் மரபுத்திங்கள் விழா-பெல்சியம். தமிழர்களின் பாரம்பரிய கலாச்சார விழுமியங்களில் முதன்மையானதாக மரபுத்திங்கள் நிகழ்வானது இயற்கையை முன்னிலைப்படுத்தி எங்கள் முன்னோர்களின் வழிகாட்டலில் தொன்று தொட்டு நடைபெற்று வருகின்றது.
இந்நிகழ்வானது 19.01.2025 அன்று பெல்சியத்தில் அன்வேர்ப்பன் என்னும் இடத்தில் சிறப்பான முறையில் நடைபெற்றது. முதன்மை நிகழ்வுகளுடன் ஆரம்பமான விழாவில் எங்கள் பாரம்பரிய நாதஸ்வர மங்கள வாத்தியத்துன் தமிழர்களின் வந்தோரை வரவேற்கும் பண்பின் முறையில் லரவேற்பு நடனமும் , பாரம்பரிய நடனங்களான கோலாட்டம்,கும்மி,ஒயிலாட்டம் ,
மற்றும் பரதநாட்டியம் , யோகசனம் , பாடல்கள் ,நாடகம், என்பன இடம்பெற்று நிறைவாக “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் ” என்ற பாடலுடன் , “தமிழரின் தாகம் தமிழீத்தாயகம் ” என்ற தாரகமந்திரத்துடன் நிறைவு பெற்றது.