by 9vbzz1

இராமநாதன் அர்ச்சுனாவிற்கு எதிராக உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் – இந்துமத பீடத்தின் செயலாளர் ! on Friday, January 24, 2025

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு எதிராக உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என சர்வதேச இந்துமத பீடத்தின் செயலாளர் கலாநிதி சிவஸ்ரீ இராமசந்திர குருக்கள் பாப்புசர்மா புத்தசாசன மற்றும் கலாசார அமைச்சர் ஹினிதும சுனில் செனவியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இராமநாதன் அர்ச்சுனா இந்து சமயத்தையும், இந்து சமையத்தை பின்பற்றுவோரையும் மற்றும் இந்துக்கள் அணியும் திருநீறு பற்றியும் மோசமான வார்த்தை பிரயோகங்களை தனது முகநூலில் பதிவிட்டமைக்கு சர்வதேச இந்துமத பீட அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அவருக்கு எதிராக புத்தசாசன மத கலாசார அமைச்சர் நிச்சயமாக மத நிந்தனையை ஏற்படுத்தும் சட்ட ஒழுங்கில் சட்ட ரீதியாக அவருக்கு எதிரான நடவடிக்கை எடுக்க வேண்டும். அர்ச்சுணா பயன்படுத்தும் வார்த்தைகள் சமய குருமார்கள் அனைவரையும் தாக்கக்கூடிய வகையில் உள்ளன.

அத்துடன் மந்திரமாவது நீறு என்று போற்றப்படும் புனிதமான திருநீற்றையும் அதனை அணிகின்ற இந்து மக்களையும் குறிப்பாக அங்கு ஒருவன் இருப்பான் என்று சுட்டிக்காட்டி அவர் பேசுகின்ற வார்த்தை எங்களுடைய குருமார்களை தாக்கி பேசுவதையும் நாங்கள் உணரக்கூடியதாக இருக்கின்றது. இவ்வாறான மோசமான வார்த்தைகளை பயன்படுத்துவோருக்கு எதிராக மத நித்தனையின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேவேளை இந்து மக்களிடம் அவர் மன்னிப்பும் கோரவேண்டும்.

அத்துடன் இவரை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்து எடுத்த தமிழ் மக்கள் இவரது நடவடிக்கைகள் காரணமாக மிகுந்த வெட்கமடைந்துள்ளனர். எனவே பா.உ அர்ச்சுனா பகிரங்கமாக முகநூலில் பதிவிட்டத்தையும் அகற்றி இந்து மக்களிடம் மன்னிப்பும் கோர வேண்டும் எனவும் சர்வதேச இந்துமத பீடம் தனது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்