விகாரைக்கு அருகில் புதையல் தோண்டிய ஏழு பேர் கைது ! on Friday, January 24, 2025
மாத்தளை, மஹவெல, அம்பொக்க பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றிற்கு அருகில் உள்ள காணி ஒன்றில் புதையல் தோண்டியதாக கூறப்படும் ஏழு சந்தேக நபர்கள் நேற்று வியாழக்கிழமை (23) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக மஹவெல பொலிஸார் தெரிவித்தனர்.
மஹவெல பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தம்புள்ளை, மில்லவான, ஹிரியால, அக்குரம்பொட, இப்பாகமுவ, குருதெனிய மற்றும் கடுகண்ணாவை ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 27 முதல் 51 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.
சந்தேக நபர்களிடமிருந்து புதையல் தோண்டுவதற்குப் பயன்படுத்தப்படும் பல்வேறு பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.