தாயார் மீது துப்பாக்கி சூடு நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரை மகனார் வெட்டி படுகொலை செய்துள்ளார் எனும் சந்தேகத்தில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா சுந்தரபுரத்தில் நேற்றைய தினம் இரவு அப்பகுதியை சேர்ந்த சுந்தரலிங்கம் சுகந்தன் (வயது 28) எனும் நபர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்
உயிரிழந்த நபர் கடந்த தீபாவளி தினத்தன்று தனது மாமியார் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் மாமியார் படுகாயமடைந்திருந்தார். குறித்த சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் இருந்து , தற்போது பிணையி விடுக்கப்பட்டுள்ளார்
இந்நிலையில் நேற்றைய தினம் இரவு தனது மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வேளை அவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள ஈச்சங்குளம் பொலிஸார் உயிரிழந்தவரின் மைத்துனனை கைது செய்துள்ளனர்.
தாயார் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதற்கு பழிவாங்கும் நோக்குடன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்னுள்ளம் சந்தேகத்தில் பொலிஸார் , துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கான பெண்ணின் மகனை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்