மொட்டுவின் தேர்தல் பிரச்சாரம் நாளை ஆரம்பம் !

by 9vbzz1

மொட்டுவின் தேர்தல் பிரச்சாரம் நாளை ஆரம்பம் ! on Friday, January 24, 2025

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நாளை (25) அனுராதபுரத்தில் ஆரம்பமாக உள்ளது.

கட்சியின் தேசிய அமைப்பாளர், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ரபக்ஷவின் தலைமையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அதன்படி, முதலில் ஜெய ஸ்ரீ மஹா போதி மற்றும் ருவன்வெலிசேயவிற்குச் சென்று அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்தன தேரரிடம் ஆசி பெற கட்சி முடிவு செய்துள்ளது.

இதைத் தொடர்ந்து, கிராமப்புறத் தலைவர்களின் பங்கேற்புடன் தொடர்ச்சியான பொதுக் கூட்டங்களை நடத்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்