பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த கார் மீது துப்பாக்கி சூடு!

by wp_shnn

பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த கார் மீது நேற்றிரவு (23) துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவின் கொழும்பு வடக்கு மோட்டார் சைக்கிள் குழுவினர் குறித்த காரை துரத்திச் இந்த துப்பாக்கி சூட்டினை முன்னெடுத்தனர்.

இந்த சம்பவத்தில் ஒருவர் சிறு காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த காரை கிரேண்ட்பாஸ் பொலிஸ் பிரிவில் சோதனைக்காக நிறுத்துமாறு உத்தரவிடப்பட்ட போதிலும், அந்த உத்தரவை மீறி கார் வேகமாக பயணித்தமையினால் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காரை சோதனையிட்ட போது, அதில் சட்டவிரோத மதுபான போத்தல்கள் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்