பரந்தூர்: ‘என்ன நடந்தாலும் நிலத்தைக் கொடுக்க மாட்டோம்’ – 900 நாட்களை கடந்து போராடும் மக்கள்
கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளாக, புதிய விமான நிலையத்திற்காக தங்கள் நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு எதிராகப் போராடி வருகிறார்கள் பரந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த மக்கள்.
சென்னைக்கென புதிதாக ஒரு விமான நிலையத்தை அமைப்பதற்காக காஞ்சிபுரத்திற்கு அருகில் உள்ள பரந்தூர் உள்ளிட்ட 13 கிராமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
ஆனால், விவசாயத்தை மட்டுமே சார்ந்திருக்கும் தங்களது நிலங்களைக் கையகப்படுத்தக்கூடாது எனக் கோரி, சம்பந்தப்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் நடத்திவரும் போராட்டம் தற்போது 900 நாட்களைக் கடந்திருக்கிறது.
இந்த நிலையில்தான் திங்கள்கிழமையன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் இந்தப் பகுதிக்கு வந்து, போராட்டக் குழுவினரைச் சந்தித்து, போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்.
விஜய் இப்பகுதிக்கு வந்துசென்ற பிறகும், இந்தத் திட்டம் தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு.
பண்ணூருக்குப் பதிலாக பரந்தூர் ஏன் தேர்வுசெய்யப்பட்டது என்பது குறித்தும், சென்னைக்கு அருகில் புதிய விமான நிலையத்திற்கான தேவை குறித்தும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
ஆனால், பரந்தூர் பகுதி மக்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிடுவதாக இல்லை. அறவழிப் போராட்டத்தைத் தொடரப்போவதாகவும் தேவைப்பட்டால் நீதிமன்றத்தை நாடப்போவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
முழு விவரம் காணொளியில்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு