1
சலோச்சன கமகே பிணையில் விடுவிப்பு ! on Friday, January 24, 2025
9 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சலோச்சன கமகே உள்ளிட்ட இரண்டு சந்தேக நபர்களை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (24) உத்தரவிட்டது.
நகர அபிவிருத்தி அதிகார சபையால் கையகப்படுத்தப்பட்ட காணிக்கான இழப்பீட்டுத் தொகையை விரைவுபடுத்துவதற்காக தொழிலதிபர் ஒருவரிடமிருந்து 9 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்கள் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.