இலங்கை வரலாற்றில் முதன்முறையாக நாடாளுமன்றில் பொங்கல் விழா

by adminDev

நாடாளுமன்றில் முதன்முறையாக தைப்பொங்கல் நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது.

புத்த சாசன மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் வழிகாட்டலில், சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் தைப்பொங்கல் நிகழ்வு இன்று காலை நாடாளுமன்ற வளாகத்தின் முன்பாக இடம்பெற்றது.

விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து பொங்கல் நிகழ்வு இடம்பெற்று கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related

தொடர்புடைய செய்திகள்