இலங்கை ஆடை சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை ! on Friday, January 24, 2025
இலங்கை ஆடை சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தரவு அறிக்கையில் 2023 உடன் ஒப்பிடும்போது இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருவாய் கடந்த ஆண்டு 5% அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளது.
அத்துடன் 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, கடந்த ஆண்டு அமெரிக்காவிற்கான இலங்கையின் ஆடை ஏற்றுமதி ஒட்டுமொத்தமாக 5.23% அதிகரித்துள்ளது, இதன் மூலம் கிடைத்த வருவாய் 1.9 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் இங்கிலாந்து தவிர்த்து ஐரோப்பாவிற்கான ஆடை ஏற்றுமதி 0.81% அதிகரித்துள்ளது, இதன் மூலம் கிடைத்த வருவாய் 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தரவு அறிக்கை கூறுகிறது.
2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, கடந்த ஆண்டு ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கையின் ஆடை ஏற்றுமதி 7.65% அதிகரித்துடன் வருவாய்யாக 675 மில்லியன் டொலர்களை எட்டியுள்ளதாகவும் தரவுகள் காட்டுகின்றன.
மேற்கூறிய நாடுகளைத் தவிர மற்ற நாடுகளுக்கான ஏற்றுமதியும் 2023 உடன் ஒப்பிடும்போது கடந்த ஆண்டு 10.13% அதிகரித்துள்ளது, இதன் வருவாய் $778.4 மில்லியனாக அதிகரித்துள்ளது
மேலும் இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருவாய் 2022 ஆம் ஆண்டில் 5.6 பில்லியன் டொலர்களாகவும், 2020 ஆம் ஆண்டில் 5 பில்லியன் டொலர்களாகவும், 2019 ஆம் ஆண்டில் 5.3 பில்லியன் டொலர்களாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.