5
புலமைப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான முறையீடுகளை இணையவழி ஊடாக சமர்ப்பிக்கலாம் ! on Friday, January 24, 2025
2024 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான மேன்முறையீடுகளை இணையவழி ஊடாக சமர்ப்பிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் கோரியுள்ளது.
அதன்படி, எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 6ஆம் திகதி வரை இதற்கான காலம் ஒதுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று வெளியாகின.
அதற்கமைய, குறித்த பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்திற்கு பிரவேசித்து பார்வையிட முடியும்.