2
on Thursday, January 23, 2025
பாடத்திட்டம் மற்றும் பரீட்சை முறைமை உள்ளிட்ட புதிய கல்வி சீர்திருத்தங்கள் 2026 முதல் செயல்படுத்தப்படும் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
முந்தைய அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட கல்வி சீர்திருத்த திட்டங்களில் நேர்மறையான மாற்றங்களைச் செய்ய எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
தற்போதுள்ள கல்வி முறை மாணவர்களுக்கு மிகவும் பொருத்தமானதாக மாற்றியமைக்கப்படும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
அதன்படி, கல்வியில் போட்டித்தன்மையைக் குறைக்கும் நோக்கில், 2026 முதல் கல்விச் சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாகவும், பரீட்சை முறை மற்றும் பாடத்திட்டத்தை திருத்தம் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.