இந்தியாவுடனான பாலம் அமைப்பது தொடர்பில் அரசங்கத்துக்கு இணக்கமா இல்லையா என எங்களுக்கு தெரியாது – ரிஷாத் பதியுதீன் ! on Thursday, January 23, 2025
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பாலம் அமைப்பது தொடர்பில் அரசங்கம் எந்த இணக்கப்பாடும் காணப்பட்டதாக தெரியவில்லை. கடந்த அரசாங்கங்கள் இது தொடர்பில் இணக்கப்பாடு கண்டபோதும் அது கைகூடவில்லை. அதனால் பாலம் அமைக்கும் திட்டம் தற்போது கைவிடப்பட்டதா அல்லது இந்த அரசங்கத்துக்கு அது தொடர்பில் இணக்கம் இல்லையா என எங்களுக்கு தெரியாது என ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (22) இடம்பெற்ற கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் 2 ஆம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
பாராளுமன்றத்தில் இருக்கும் 225பேரும் தங்களின் நிலைப்பாட்டை நேர்மையானதாக தூய்மையானதாக ஆக்கிக்கொள்வதன் மூலம் நாடு சுத்தமாகி நாட்டின் எதிர்காலம் சிறப்பானதாக அமையும். என்றாலும் இந்த வேலைத்திட்டம் தொடர்பில் மக்களுக்கு சரியான புரிந்துணர்வு இன்னும் இல்லாமல் இருக்கிறது. பாராளுமன்றத்தில் இருக்கும் எங்களுக்கு கூட இந்த வேலைத்திட்டம் தொடர்பில் சரியான தெளிவு இல்லை.
கடந்த கால ஆட்சியாளர்கள் சரியில்லை என்பதாலே மக்கள் தேர்தலில் இந்த அரசாங்கத்தை தெரிவு செய்திருக்கிறார்கள்.அதனால் அரசாங்கம் கடந்த கால ஆட்சியாளர்களை குறைகூறிக்கொண்டிருக்காமல் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லாவிட்டல் இந்த நாடு மீண்டும் வீழ்ச்சியடைந்து செல்வதை எங்களால் தடுத்து நிறுத்த முடியாமல் போகும்.
கடந்த கால ஆட்சியாளர்கள் தங்களுக்கு தேவையான முறையில் சட்டங்களை மாற்றிக்கெண்டார்கள். அவ்வாறு இல்லாமல் நாட்டுக்கு தேவையான மாற்றங்களை மேற்கொள்ள தேவையான மக்கள் ஆணை அரசாங்கத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. அதனை அரசாங்கம் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.
அதேபோன்று எமது அண்டை நாடான இந்தியா எப்போதும் எங்களுக்கு உதவி செய்யும் நாடாகும். ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின்போதான அறிவி்ப்பில் இந்தியாவுடனான பாலம் அமைப்பது தொடர்பான எந்த இணக்கப்பாடும் காணப்படவில்லை. ஆனால் கடந்த காலங்களில் இருந்த அரசாங்கங்கள் இந்தியாவுக்கு இலங்கைக்கும் இடையில் பாலம் அமைப்பது தொடர்பில் இணக்கப்பாடு காணப்பட்டது. ஆனால் அது தற்போது கைவிடப்பட்டதா அல்லது இந்த அரசங்கத்துக்கு அது தொடர்பில் இணக்கம் இல்லையா என எங்களுக்கு தெரியாது.
எமது நாடு வீழ்ச்சியடைந்தபோது 4பில்லியன் டொலர் கொடுத்து நாட்டை பாதுகாத்தது இந்தியாவாகும். இந்தியா அன்று எங்களுக்கு அந்த உதவியை செய்திருக்காவிட்டால் எமது நாடு வீச்சியடைந்திருக்கும். அதனல் நங்கள் அந்த மக்களுடன் எமது நட்டை இணைக்கும்போது எமது நட்டின் பொருளாதாரம் மேம்படக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. உலக நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வரக்கூடிய வாய்ப்பு அதிகரிக்கிறது. இந்தியாவை இலங்கையையும் இணைக்கும் இந்த பாலம் அமைக்கும்போது வடக்கு கிழக்கு பிரதேசங்கள் சுற்றுலா துறை மூலம் அபிவிருத்தியடையும்.
மேலும் சஜித் பிரேமதாச அமைச்சராக இருந்து நிர்மாணித்து கொடுக்கப்பட்ட வீடுகள் இன்னும் பூரணப்படுத்தப்படாமல் இருக்கின்றன. மாவட்ட கூட்டங்களின்போது மக்கள் அந்த வீடுகளை பூர்த்தி செய்து தருமாறே கேட்கின்றனர். அதனால் கோட்டபாய ராஜபக்ஷ் செய்த தவறை இந்த அரசாங்கம் செய்யக்கூடாது. அதனால் அந்த வீடுகள் தொடர்பில் மதிப்பீடு மேற்கொண்டு அவற்றை பூரணப்படுத்திக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றர்.