U19WC 2025; 60 ஓட்டங்களால் இலங்கையை வீழ்த்திய இந்தியா!

by smngrx01

2025 ஐசிசி மகளிர் U19 உலகக் கிண்ணத்தின் 24 ஆவது போட்டியில் இந்திய அணியானது இலங்கையை வீழ்த்தி, தொடரில் மூன்றாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.

இன்று (23) பிற்பகல் கோலாலம்பூரில் ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி பந்து வீச்சை மேற்கொள்ளத் தீர்மானித்தது.

அதற்கிணங்க முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணியானது, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 118 ஓட்டங்களை பெற்றது.

கோங்காடி த்ரிஷா மாத்திரம் அணி சார்பில் அதிகடிபயாக 49 ஓட்டங்கள‍ை எடுத்தார்.

119 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியானது 20 ஓவர்களில் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 58 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

இதனால், இந்தியா 60 ஓட்டங்களினால் வெற்றி பெற்று 2025 ஐசிசி மகளிர் U19 உலகக் கிண்ணத் தரவரிசையில் 6 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்க வைத்தது.

தொடரில் இலங்கை அணி சந்திக்கும் முதல் தோல்வி இது என்பதுடன் இந்திய அணியின் மூன்றாவது வெற்றி இதுவாகும்.

தொடர்புடைய செய்திகள்