by smngrx01

அனுரவும் மனைவியும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர் வெள்ள நிவாரணத்திற்காக ஒதுக்கப்பட்ட ரூ.6.1 மில்லியனுக்கும் அதிகமான தொகையை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் அவரது மனைவி, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக சிறிது நேரத்திற்கு முன்பு கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

பிங்கிரிய மற்றும் நாரம்மல பகுதிகளில் 2014 ஆம் ஆண்டு  ஏற்பட்ட வெள்ளத்தால் இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாகக் கூறி பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திடமிருந்து ரூ.61,46,110 பெற்று, அதற்குப் பதிலாக 2015 ஜனாதிபதித் தேர்தலில் பிரச்சார நடவடிக்கைகளுக்குப் பணத்தைப் பயன்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்