அமெரிக்காவில் பாடசாலையில் துப்பாக்கி சூட்டு சம்பவம் – இருவர் பலி
அமெரிக்காவின் நாஸ்வில் பகுதியில் பாடசாலையொன்றில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் இரு மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
தென்நாஸ்வில் பகுதியில் உள்ள அன்டியோச் பாடசாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாடசாலையின் உணவுவிடுதியில் 17 வயது சொலொமன் ஹென்டர்சன் என்ற மாணவன் இரு மாணவர்கள் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட பின்னர் தன்னைதானே தனது கைத்துப்பாக்கியால் சுட்டு உயிரிழந்தார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
16 மாணவியொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். மற்றொரு மாணவன் உயிருக்காக போராடுகின்றான்.
பாடசாலை முழுவதற்கும் மிகவும் வேதனையான நாள் நாஸ்வில் பொதுபாடசாலைகளில் உள்ளவர்களிற்கும் வேதனையான நாள் என தெரிவித்துள்ள பாடசாலை நிர்வாகம்,அவசர சூழ்நிலைகளில் செயற்படவேண்டிய விதத்தில் செயற்பட்டு மேலும் உயிரிழப்புகளை தவிர்த்த பாடசாலை ஊழியர்களி;ற்கு நன்றி என தெரிவித்துள்ளது.