1
2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, https://www.doenets.lk/examresults என்ற இணையத்தளத்திற்குச் சென்று பெறுபேறுகளை பார்வையிட முடியும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 15 ஆம் திகதி நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு மொத்தம் 323,879 மாணவர்கள் தோற்றியிருந்தனர்
இதேவேளை பரீட்சை வினாத்தாள்கள் வெளியானதால் இடைநிறுத்தப்பட்ட புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை விரைவில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போது தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.