தமிழ் தேசிய கட்சிகளை ஒருங்கிணைத்து தனது பயணத்தை அரம்பித்துள்ள நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி சட்டத்தரணி நடராஜர் காண்டீபனை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் இன்று விசாரணைக்குட்படுத்தியுள்ளனர்.
கடந்த 2023ம் ஆண்டில் செப்டம்பர் 17ம் திகதி தியாகதீபம் திலீபன் அவர்களின் திருவுருவப் படம் தாங்கிய ஊர்தி பவனி திருகோணமலை சர்தாபுரத்தில் காடையர்களால் தாக்குதலுக்குள்ளானது.
இந்நிலையில் 16 மாதங்கள் கடந்து விசாரணை இடம்பெறுவது தொடர்பில் எனது ஆட்சேபனையை தெரிவித்திருந்தாக காண்டீபன் ஊடகங்களிடையே தெரிவித்துள்ளார்.
நான்கு மணித்தியாலங்கள் வரையில் இடம் பெற்ற விசாரணையில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் கேள்விகளுக்கு பதிலை வழங்கியிருந்ததுடன் தனது அரசியல் வேணவாவை விடுதலைப் போராட்டமும் திலீபனும் காவி நின்றதாலேயே நான் அதனை ஆதரித்திருந்தேன்.இன்னும் ஆதரிக்கிறேன். இனியும் ஆதரிப்பேன் என்பதை நான் பதிவு செய்தேன் எனவும் காண்டீபன் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே சட்டத்தரணி சுகாஸ் முல்லைதீவில் குருந்தூர்மலை உள்ளிட்ட போராட்;டங்களிற்காக விசாரணைகளை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.