போதையில் உறங்கும் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் – விசாரணைகள் ஆரம்பம்

by wp_shnn

பொலிஸ் அதிகாரிகள் சீருடை மற்றும் சிவில் உடையில் போதையில் உறங்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ள நிலையில் அது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு அறிவித்துள்ளது. 

போக்குவரத்து பிரிவு பொலிஸ் அதிகாரி ஒருவர் பொலிஸ் சீருடையுடனும் , ஏனைய சிலர் சிவில் உடையிலும் போதையில் உறங்கும் அறை ஒன்றுக்குள் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் மேலும் சில பொலிஸ் உத்தியோகஸ்தர்களுடன் சென்று , சீருடையில் போதையில் காணப்படும் பொலிஸ் உத்தியோகஸ்தரை அங்கிருந்து மீட்டு பொலிஸ் வாகனத்தில் அழைத்து செல்லும் வீடியோ பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன. 

இது தொடர்பில் பொலிஸ் ஊடக பிரிவிடம் ஊடகங்கள் வினாவிய போது, சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்