நிலையான நிலையில் தங்கத்தின் விலை!

by 9vbzz1

இலங்கையில் தங்கத்தின் விலையானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (23) நிலையான நிலையில் உள்ளது.

அதன்படி, கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது இன்று 216,500 ரூபாவாக உள்ளது.

22 கரட் தங்கம் ஒரு பவுணானது 200,200 ரூபாவாக உள்ளதாக அகில இலங்கை நகைகள் விற்பனையாளர் சங்கப் பொதுச் செயலாளர் ஆர்.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சர்வதேச சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 2,751.82 அமெரிக்க டொலர்களாக காணப்படுகின்றது.

Related

Tags: GOLGold Priceதங்கம்

தொடர்புடைய செய்திகள்