அவுஸ்திரேலிய ஓபன்; இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் சபலெங்கா!

by smngrx01

மெல்போர்னில் வியாழன் அன்று (23) ஸ்பெயினின் பவுலா படோசாவை 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்திய உலகின் நம்பர் 1 வீராங்கனையான அரினா சபலெங்கா (Aryna Sabalenka) தனது மூன்றாவது அவுஸ்திரேலிய ஓபன் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

26 வயதான பெலாரஷ்ய சபலெங்கா சனிக்கிழமை (25) நடைபெறும் இறுதிப் போட்டியில் இரண்டாம் நிலை வீராங்கனை போலே இகா ஸ்வியாடெக் அல்லது 19 ஆம் நிலை வீராங்கனையான அமெரிக்க மேடிசன் கீஸை எதிர்கொள்வார்.

சபலெங்கா இப்போது 20 அவுஸ்திரேலிய ஓபன் போட்டிகளில் வென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Aryna SabalenkaAustralian OpenMelbournePaula Badosaஅரினா சபலெங்காபவுலா படோசா

தொடர்புடைய செய்திகள்