யாழில். தொப்புள் கொடியுடன் மீட்கப்பட்ட சிசு – உயிரிழந்தே பிறந்துள்ளது

by 9vbzz1

தொப்புள் கொடியுடன் கிணற்றில் வீசப்பட்ட சிசு , இறந்தே பிறந்துள்ளது என உடற்கூற்று பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. 

கைதடி பகுதியில் தோட்ட கிணறு ஒன்றில் இருந்து கடந்த செவ்வாய்க்கிழமை தொப்புள் கொடியுடன் சிசு ஒன்று மீட்கப்பட்டது. 

குறித்த சிசுவின் உடற்கூற்று பரிசோதனையின் போது சிசு உயிரிழந்தே பிறந்துள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. 

அதேவேளை குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் சிசுவின் தாய் என சந்தேகிக்கப்படும் பெண் , அவரது தாய் மற்றும் சகோதரி ஆகிய மூன்று பெண்களும் சாவகச்சேரி பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நிலையில் , அவர்களை நேற்றைய தினம் புதன்கிழமை சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் , மூவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது 

தொடர்புடைய செய்திகள்