மிஷ்கின் பெரிய அப்பாடக்கரா ? பதிலடி கொடுத்த அருள்தாஸ்

by 9vbzz1

இயக்குநர் பா. ரஞ்சித்-இன் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் “பாட்டல் ராதா.” பா. ரஞ்சித்-இன் உதவி இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கியுள்ள பாட்டல் ராதா திரைப்படத்தில் சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் வரும் ஜனவரி 24 ஆம் திகதி வெளியாகவுள்ளது.

இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் மிஷ்கின் அநாகரீகமாக அவ சொற்களை பேசி முகம் சுளிக்க வைத்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது.

ஒரு பெரிய மதிப்புள்ள இயக்குனர் மேடையில் இவ்வாறு பேசுவது தவறானது என நெட்டிசன்கள் அவர்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சினிமா மேடையில் அநாகரிகமாக பேசியதாக இயக்குநர் மிஷ்கினுக்கு நடிகர் அருள்தாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சுசீந்திரன் இயக்கியுள்ள ‘2K லவ் ஸ்டோரி’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய அருள்தாஸ், “பாட்டல் ராதா படத்தின் மேடையில் மிஷ்கின் பேசியது அநியாயமாக இருந்தது. அவ்வளவு மோசமாக பேச வேண்டிய தேவை இல்லை. இயக்குநர் என்றால் என்னவேண்டுமானாலும் பேசலாமா?

மேடை நாகரீகம் மிகவும் முக்கியம். சினிமா மேடைக்கென நாகரிகம் இல்லாமல் இஷ்டத்துக்கு பேசுவதா? இயக்குநர் மிஷ்கின் நாவை அடக்கி பேச வேண்டும்.

எல்லாரையும் அவன், இவன்-னு சொல்லுற.. யாருடா நீ..? பிறரை ஒருமையில் பேசும் அவர் என்ன பெரிய அப்பா டக்கரா? மிஷ்கின் ஒரு போலி அறிவாளி” என்று கடுமையாக விமர்சித்து பேசினார்.

தொடர்புடைய செய்திகள்