வடக்கில் கடந்த வருடம் 34 படுகொலைகள் ; 28 பொலிஸார் பணி நீக்கம்

by wp_shnn

வடமாகாணத்தில் கடமையாற்றி வந்த 28 பொலிஸார் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், வடக்கில் 34 படுகொலை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் வடமாகாண சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் திலக் தனபால தெரிவித்துள்ளார். 

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், 

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான கால பகுதியில் 28 பொலிஸார் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் 

லஞ்சம் பெற்றமை , மோசடிகளில் ஈடுபட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில்ன் அடிப்படையிலையே அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் 

அதேவேளை வடக்கு மாகாணத்தில் கடந்த வருடம் ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான கால பகுதியில் 34 படுகொலைகள் இடம்பெற்றுள்ளதாகவும்  மேலும் , 255 கொள்ளைகள் , 501 திருட்டுக்கள் இடம்பெற்றுள்ளதாகவும் , 70 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்