அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் நேற்று முன்தினம் பதவியேற்றுள்ள நிலையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார்.
குறிப்பாக உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறுதல், பரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுதல், அமெரிக்காவின் தென்பகுதி எல்லைகளில் அவசர நிலையை பிரகடனப்படுத்துதல் உட்பட பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார்.
இந்நிலையில், தற்போது சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 10 சதவீத வரி விதிக்க ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. சீனா மீதான கூடுதல் வரிவிதிப்பு தொடர்பான குறித்த அறிவிப்பை வரும் 1ஆம் திகதி ட்ரம்ப் வெளியிடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், மெக்சிகோ மற்றும் கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 25 சதவீத வரி விதிக்கவும் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பும் வரும் 1ஆம் திகதி வெளியாகலாம் என எதிர்ப் பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.