4
கம்பளை-கண்டி பிரதான வீதியில் குருதெனிய எனும் பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் மோட்டார் வாகன சாரதி உயிரிழந்துள்ளார்
இன்று காலை கோவிலுக்கு அன்னதானம் செய்துவிட்டு பின்னர் வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது
கொழும்பின் தெல்கொட பகுதியிலிருந்து கம்பளை நோக்கி வந்த இந்த கார், வீதியை விட்டு விலகி, மோட்டார் வாகன சாரதி மீது மோதி சாலையின் ஓரத்திலும் மோதியது.
மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் யார் என்பதை அறிய முடியாத நிலையில்,உயிரிழந்தவரின் சடலம் பேராதனை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. தவுலகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.