அக்கரைப்பற்று இராமகிருஷ்ணா தேசிய பாடசாலை வெள்ளத்தில் ..! கற்றல் நடவடிக்கை ஸ்தம்பிதம்!!

by wp_shnn

அக்கரைப்பற்று இராமகிருஷ்ணா தேசிய பாடசாலை வெள்ளத்தில் ..! கற்றல் நடவடிக்கை ஸ்தம்பிதம்!! on Wednesday, January 22, 2025

(வி.ரி.சகாதேவராஜா)

அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலை வெள்ளத்தினால் முற்றுமுழுதாக சூழ்ந்துள்ளது .

இன்று (22) புதன்கிழமை பெய்த கனமழையையடுத்து வெள்ளம் பாடசாலையில் புகுந்துள்ளது. பாடசாலையின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டிருக்கின்து. 

பாடசாலை அதிபர் டேவிட் அமிர்தலிங்கத்திடம் கேட்டபோது ..பாடசாலையின் ஒன்றுகூடல் மண்டபம் நூலகம் உள்ளிட்ட பல கட்டடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பாடசாலைக்கு மாணவர் வரவு வெகுவாக குறைந்திருந்தது

வந்த மாணவர்களையும் வெள்ள அபாயம் கருதி  பெற்றோர்கள் அழைத்து சென்றனர். எனினும் கபொத. சா.த. / உ.தர விசேட பரீட்சைகள் நடைபெற்றன.

பாடசாலையில் தாழ்நில பகுதி அனைத்து வகுப்பறைகளிலும், பாடசாலை நூலகம், பிரதான மண்டபம் என்பன நீரில் மூழ்கி காணப்படுகிறது.

 பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. திருக்கோவில் வலயக்கல்விப் பணிப்பாளரிடம் அறிவித்துள்ளோம் என்றார்.

தொடர்புடைய செய்திகள்