by adminDev2

வாய்க்காலில் வீழ்ந்து கெப் வாகனம் விபத்து மட்டக்களப்பு – திருகோணமலை பிரதான வீதியில் இருதயபுரம் பகுதியை அண்மித்த பகுதியில் வாய்க்காலில் வீழ்ந்து கெப் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

கெப் வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி அருகில் உள்ள வாய்க்காலினுள் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து இன்று புதன்கிழமை  (22) காலை இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பில் இருந்து திருகோணமலையை நோக்கி பயணித்த கெப் வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி அருகில் உள்ள வாய்க்காலினுள் வீழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கெப் வாகனத்தில் பயணித்தவர்கள் சிறு காயங்களுடன் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்