by adminDev2

மூன்று திருத்தச் சட்டமூலங்களை தனிநபர் பிரேரணையாக முன்வைக்க தயாசிறி ஜயசேகர தீர்மானம் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் தொடர்பான மூன்று திருத்தச் சட்டமூலங்களை தனிநபர் பிரேரணையாக பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தீர்மானித்துள்ளார்.

இது தொடர்பான சட்டமூல வரைபுகளை புதன்கிழமை (22) அவர் பாராளுமன்ற செயலாளரிடம் கையளித்துள்ளார்.

இதன்படி 1989 ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க மாகாண சபைகள் (விளைவாந்தன்மையான ஏற்பாடுகள்) சட்டத்தை திருத்துவதற்கான சட்டம், 1987ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க மாகாண சபைகள் சட்டத்தை திருத்துவதற்கானதொரு சட்டம் மற்றும் 1992ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க தத்துவஙகள் கைமாற்றல் (பிரதேச செயலாளர்கள்) சட்டத்தை திருத்துவதற்கானதொரு சட்டம் ஆகியவற்றின் வரைபுகளை தயாசிறி ஜயசேகர பாராளுமன்ற செயலாளரிடம் கையளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்