by 9vbzz1

மருந்து மாபியா-பல அரசியல்வாதிகளுக்கு தொடர்பு 2019 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை பப்பாவெரின் ஊசி மருந்தை அதிக விலைக்கு வழங்கிய நிறுவனத்துடன் பல அரசியல்வாதிகளுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறியுள்ள சுகாதார அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ, சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என இன்று தெரிவித்துள்ளார்.

ஒரு காலத்தில் 76,000 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு மருந்தின் விலை தற்போது ரூ. 359க்கு கிடைக்கப்பெறுவதை உறுதிப்படுத்திய அமைச்சர், இது ஏகபோக நடைமுறைகள் மற்றும் “மருந்து மாபியாவின்” செல்வாக்கின் விளைவு என்று கூறினார்.

ஏகபோக நடைமுறைகளின் விளைவாக, குறிப்பிட்ட மருந்தை இறக்குமதி செய்ய பொதுவாக ஒரே ஒரு நிறுவனம் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்திர சந்திப்பில் அமைச்சர் விளக்கினார்.

“ஒன்று , மற்ற நிறுவனங்கள் பதிவு செய்ய தடை விதிக்கப்பட்டிருக்கிறது, அல்லது, பல நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், மருந்து ஒரே ஒரு நிறுவனத்தால் மட்டும் திறம்பட இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது,” என்று அவர் கூறினார்.

இந்த மருந்து இறக்குமதி செய்யப்படும் போது விலை சூத்திரம் இல்லை என்றும், நிறுவனங்கள் நிர்ணயித்த விலைக்கே மருந்துகளை அரசு கொள்முதல் செய்ததாகவும் சுகாதார அமைச்சர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்