1
யாழ்ப்பாணத்தில், காய்ச்சல் காரணமாக சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்
புங்குதீவு 06ஆம் வட்டாரத்தை சேர்ந்த கிருஷ்ண குமார் அபிஷா (வயது 04) எனும் சிறுமியே உயிரிழந்துள்ளார்.
கடந்த சில தினங்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த சிறுமியை பெற்றோர் கொக்குவில் பகுதியில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு சென்று சிகிச்சை பெற்றுள்ளனர்.
அந்நிலையில் , நேற்று முன்தினம் திங்கட்கிழமை சிறுமிக்கு கடும் சுகவீனம் ஏற்பட்ட நிலையில் , பெற்றோர் புங்குடுதீவு வைத்திய சாலைக்கு கொண்டு சென்ற வேளை , சிறுமி ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்.
சிறுமியின் உடற்கூற்று பரிசோதனையில் , நிமோனியா காய்ச்சல் காரணமாகவே சிறுமி உயிரிழந்துள்ளார் என அறிக்கையிடப்பட்டுள்ளது.