முதலில் இழப்பீடு:பின்னரே காணி பிடிப்பு

by wamdiness

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின்  விரிவாக்கத்துக்கான காணிகளை சுவீகரிப்பதற்கு முன்னதாக 1986ஆம் ஆண்டு பலாலி விமான நிலையத்துக்காக பெற்றுக் கொள்ளப்பட்ட காணிகளுக்கு இன்னமும் இழப்பீடு வழங்கப்படவேண்டுமென வடக்கு மாகாண ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய பெறுமதிக்கு ஏற்ப அவர்களுக்கு இழப்பீடு முதல்கட்டமாக வழங்கிய பின்னரே தற்போது தேவைப்படும் மேலதிக காணிகளுக்காக சுவீகரிப்பை ஆரம்பிக்கலாம் என்றும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

காணிகளை மேலதிகமாக சுவீகரிப்பது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தினருக்கும் இடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் அடிப்படை கட்டுமானங்கள் மற்றும் வசதிகளை துரிதமாக மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்ததுடன் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதை விரிவாக்கம் முன்னெடுப்பதற்கு 114 ஹெக்டேயர் நிலப் பரப்பு சுவீகரிக்கப்பட வேண்டியுள்ளதாகவும் விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தினர் குறிப்பிட்டனர்.குறிப்பாக கடலை நோக்கியதாக அந்த விஸ்தரிப்பு அமையும் எனவும் ஆளுநருக்கு தெரியப்படுத்திய நிலையில் முன்னராக சுவீகரிக்கப்பட்ட காணிகளிற்கான இழப்பீட்டை ஆளுநர் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்