மகாராஷ்டிரா

மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தில் நடந்த ரயில் விபத்தில் குறைந்தது 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

”புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீப்பிடித்ததாக பயணிகள் மத்தியில் ஒரு வதந்தி பரவியது. இதன் பின்னர், சங்கிலி இழுத்து ரயில் நிறுத்தப்பட்டு, பல பயணிகள் ரயிலில் இருந்து இறங்கினர்.” என ரயில்வே செய்தி தொடர்பாளர் கூறினார்

“சில பயணிகள் ரயிலில் இருந்து இறங்கினர், ஆனால் மறுபுறம் வந்த கர்நாடக எக்ஸ்பிரஸ் அவர்கள் மீது மோதியது” என பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

”லக்னோவிலிருந்து மும்பைக்குச் செல்லும் புஷ்கர் எக்ஸ்பிரஸ் ரயிலின் B4 பெட்டியில் தீப்பொறி ஏற்பட்டது. பயணிகள் தீ விபத்து ஏற்பட்டதாக நினைத்தனர்.” என பூசாவல் பிரிவு ரயில்வே செய்தி தொடர்பாளர் பிபிசி மராத்தியிடம் கூறினார்.

”இதன் காரணமாக பல பயணிகள் ரயிலில் இருந்து இறங்கினர். அதே நேரத்தில் கர்நாடக எக்ஸ்பிரஸ் மறுபுறம் வந்து கொண்டிருந்தது, பல பயணிகள் மீது அந்த ரயில் மோதியது. ”

”இந்த சம்பவத்தில் 12 பயணிகள் காயமடைந்தனர், அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்” என மாவட்ட ஆட்சியர் பிபிசி மராத்தியிடம் தெரிவித்தார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.