டெல்லி பொலிஸாரை பா.ஜ.க தவறாகப் பயன்படுத்துகின்றது! – அரவிந்த் கெஜ்ரிவால்

by adminDev2

டெல்லி சட்டசபை தேர்தலை முன்னிட்டு  ஆம் ஆத்மி, பா.ஜ.க, காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் தீவிர பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில்  டெல்லி பொலிஸாரை பா.ஜ.க தவறாகப்  பயன்படுத்துவதாக ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த முன்னாள் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டியுள்ளார். அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது“  டெல்லி பொலிஸாரை பா .ஜ.க  அரசு தவறாக பயன்படுத்துகிறது. டெல்லி பொலிஸார் அனைவரும் பா.ஜ.கவுடன்  இணைந்தே செயற்படுகின்றனர். மக்களின் பாதுகாப்பிற்கு யாரும் இல்லை. ஆம் ஆத்மி கட்சியின் பிரசாரத்திற்கு இடையூறு செய்ய வேண்டுமென மத்திய உட்துறை அமைச்சகத்திடமிருந்து நேரடியாக உத்தரவு வந்துள்ளதாக மூத்த பொலிஸ்  அதிகாரி ஒருவர் என்னிடம் கூறியுள்ளார்.

70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபைக்கு அடுத்த மாதம் 5 ஆம் திகதி  ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வாக்காளர்கள் தடுத்து நிறுத்தப்படுவார்களோ? என்ற அச்சமும் எனக்கு ஏற்பட்டுள்ளது.

ஏனெனில் பா.ஜ.க பிரசாரத்திற்கு தேவையான வசதிகளை பொலிஸாரே செய்துகொடுக்கின்றனர். ஆம் ஆத்மி பிரசாரத்திற்கு இடையூறு விளைவிக்கும் பாஜக தொண்டர்களுக்கு பொலிஸார்  ஆதரவு அளித்து வருகின்றனர்” இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்