சுவர்களில் சிறுநீர் கழிக்கும் நபர்களால் பொது வெளியில் உள்ள சுவர்கள் நாசமடைந்துள்ளது !

by wamdiness

சுவர்களில் சிறுநீர் கழிக்கும் நபர்களால் பொது வெளியில் உள்ள சுவர்கள் நாசமடைந்துள்ளது ! on Wednesday, January 22, 2025

தெஹிவளை மற்றும் கல்கிசை பகுதிகளில் சிறு நீர்கழிப்பதால் பொது வெளியில் உள்ள சுவர்கள் நாசமடைந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலி குணசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று புதன்கிழமை (22) நடைபெற்ற பாராளுமன்ற அமர்விலே இதனை அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தெஹிவளை மற்றும் கல்கிசை பகுதிகளில் முறையான மலசலகூட வசதிகள் இன்மையால் சில நபர்கள் சுவர்களில் சிறுநீர் கழிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

அத்துடன், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் சிறு நீர்கழிப்பதற்கு தெஹிவளை ரயில் நிலையத்திலிருந்து கோட்டை ரயில் நிலையத்திற்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலைமையை தடுப்பதையே கிளீன் ஸ்ரீலங்கா திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது எனக் குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்