சாய்ந்தமருது-பிரதேச செயலாளர் மக்களுக்கு விடுக்கும் அறிவித்தல்..! on Wednesday, January 22, 2025
(முஹம்மத் மர்ஷாத்)
சாய்ந்தமருது-மாவடிப்பள்ளி இணைக்கும் சாய்ந்தமருது பிரதேச சபைக்குட்பட்ட சாய்ந்தமருதிலிருந்து மாவடிப்பள்ளி செல்லும் குளக்கட்டு வீதி நீண்ட காலமாக குன்றும்,குழியுமாக உடைந்து காணப்படுவதால் குறித்த வீதியை பயன்படுத்தும் பொதுமக்கள் , விவசாயிகள் ,வாகன சாரதிகள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதாக ஏற்கனவே சுட்டி காட்டப்பட்டிருந்தது.
அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக சாய்ந்தமருது – மாவடிப்பள்ளி செல்லும் உள்ளக வீதிகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்திருந்தது, இதனால் சாய்ந்தமருது பிரதேசத்தில் இருக்கும் வொலிவேரியன் கிராமத்தில் வசிக்கும் மக்கள் கடந்த கால ஏற்ப்பட்ட வெள்ளத்தில் அதிகமாக பாதிக்கப்பட்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது மீண்டும் மழை அதிகரிக்கும் போது வீதிக்கு மேல் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவது, மட்டும் இல்லாமல் குறித்த வீதி நீரினால் ஆங்காங்கே உடைக்கப்பட்டு சாய்ந்தமருது பிரதேச மக்கள் அதிகமாக வசிக்கும் வொலிவேரியன் கிராமத்தில் நீர் ஊடறுத்து தொடர்ச்சியாக பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
குறித்த வீதியினால் விவசாயிகள்,பொது மக்கள் போக்குவரத்துச் செய்வதில் சிரமங்களை எதிர்கொள்ளும் இந்த வீதியின் சரியான வடிகான்களை புணரமைப்புச் செய்து தருமாறு அப்பகுதி விவசாயிகள் முதலானோர் கோரிக்கை ஒன்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விடுக்கப்பட்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
தற்போது அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரின் அருவுருத்தலுக்கு அமைவாக
தொடர்ச்சியாக பெய்து வரும் பெரும் மழைவீழ்ச்சியினால் அம்பாறை சேனநாயக நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் பகல் 12 மணிக்கு 2 1/2 அடியும் பின்னர் 4 மணிக்கு 3 1/2 அடியும் வான் கதவுகள் திறக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஆசிக் பொதுமக்களை எச்சரிக்கையாக இருக்குமாறும் பணிப்புரை விடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது