2
மொஹமட் சாலா (Mohamed Salah) ஐரோப்பியப் போட்டிகளில் லிவர்பூல் அணிக்காக தனது கோல் எண்ணிக்கையை 50 ஆக உயர்த்தியுள்ளார்.
இங்கிலாந்தின் ஆன்ஃபீல்டில் செவ்வாயன்று (21) இரவு நடந்த லில்லியுடனான சாம்பியன்ஸ் லீக் போட்டியின் போதே எகிப்திய வீரர் இந்த மைல்கல்லை எட்டினார்.
இந்தப் போட்டியில் லில்லியை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி லிவர்பூல் சாம்பியன்ஸ் லீக் 16 ஆவது சுற்றுக்கு முன்னேறியது.
மொஹமட் சாலா இப்போது இந்த சீசனில் மூன்று சாம்பியன்ஸ் லீக் கோல்களையும் அனைத்து போட்டிகளிலும் 31 ஆட்டங்களில் 22 கோல்களையும் அடித்துள்ளார்.
ஐரோப்பாவின் முதன்மையான போட்டியில் கழகத்திற்காக அவர் அடித்த 45 ஆவது கோல் இதுவாகும்.
சலாவின் ஏனைய ஐந்து கோல்கள் கடந்த சீசனில் யூரோபா லீக்கில் ஒன்பது ஆட்டங்களில் இருந்து வந்தவை.