யாழில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வர்த்தக நிலையங்களுக்கு 11 இலட்சத்து 67 ஆயிரம் தண்டம்

by wp_shnn

யாழ்ப்பாணத்தில் சுகாதார விதிமுறைகளை மீறிய வர்த்தக நிலையங்கள் மற்றும் உணவகங்களுக்கு 11 இலட்சத்து 67 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. 

நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட திருநெல்வேலி பகுதியில் சுகாதார பரிசோதகரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது, உணவகம் மற்றும் பூட் சிற்றியில் காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த நிலையில் மீட்கப்பட்டன 

அவை தொடர்பில் சுகாதார பரிசோதகரால் யாழ் . மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் , தம் மீதான குற்றச்சாட்டை மன்றில் ஏற்றுக்கொண்டதை அடுத்து உரிமையாளர்களுக்கு ஒரு இலட்சத்து 20 ஆயிரம் மற்றும் ஒரு இலட்சத்து 47 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டது. 

அதேவேளை , யாழ் . மாநகர சபைக்கு உட்பட்ட அரியாலை , வண்ணார் பண்ணை , நாவாந்துறை பகுதிகளில் பொது சுகாதார பரிசோதகரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய 05 வர்த்தக நிலையங்கள் கண்டறியப்பட்டு அவற்றுக்கு எதிராக யாழ் . மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. 

வழக்கு விசாரணையின் போது , தம் மீதான குற்றச்சாட்டை 05 வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களும் ஏற்றுக்கொண்டதை அடுத்து அவர்களுக்கு தலா ஒரு இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்