அன்னை மகாலட்சுமியை வழிபட சிறந்த நாள் இன்று!

by guasw2

தை மாதம் என்பது சிறப்புக்குரிய மாதம் என்று நம் அனைவருக்குமே தெரியும்.

அப்படிப்பட்ட தை மாதத்தில் தினமும் காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது.

அப்படி நாம் வழிபாடு செய்யும் பட்சத்தில் அந்த வருடம் முழுவதுமே நமக்கு சிறப்பான வருடமாக அமையும் என்றும் கூறப்படுகிறது.

மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்வதற்கு என்று பல வழிமுறைகள் இருக்கின்றன. அவற்றில் எந்த வழிமுறையை நம்மால் பின்பற்ற முடியுமோ அந்த வழிமுறையை பின்பற்றி வழிபாடு செய்தாலே போதும்.

துளசி செடியை மகாலட்சுமி தாயாக நினைத்து தினமும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்தால் கூட மகாலட்சுமி தாயாரின் அருள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இருப்பினும் ஒரு சில குறிப்பிட்ட நாட்கள் மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்வதற்கு உகந்த நாட்களாக திகழ்கின்றன.

அந்த நாட்களில் மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்தோம் என்றால் நம்முடைய தரித்திர நிலை முற்றிலும் நீங்கும்.

மகாலட்சுமி தாயாருக்கு உகந்த கிழமையாக திகழ்வது வெள்ளிக்கிழமை என்று நம் அனைவருக்குமே தெரியும்.

அதனால் தை மாதத்தில் வரக்கூடிய ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்ய வேண்டும்.

அதேபோல் பௌர்ணமி அமாவாசை போன்ற தினங்களிலும் மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்ய வேண்டும்.

இதோடு மகாலஷ்மி தாயார் குரிய நட்சத்திரமான ஸ்வாதி நட்சத்திர நாளன்று நாம் வழிபாடு செய்தோம் என்றால் நமக்கு அளவில்லா செல்வ வளம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த சுவாதி நட்சத்திரம் என்பது ஜனவரி மாதம் 22 ஆம் திகதி தை மாதம் ஒன்பதாம் நாள் நவமி திதியுடன் சேர்ந்து வருகிறது.

நவமி என்பது ராமருக்கு உகந்த திதி என்று நம் அனைவருக்கும் தெரியும்.

அதேபோல் புதன்கிழமையும் பெருமாளுக்கு உரிய கிழமையாக கருதப்படுகிறது.

இவை அனைத்தும் சேர்ந்து வரக்கூடிய இந்த நாளில் மகாலட்சுமி தாயாரை பூஜை செய்தோம் என்றால் கண்டிப்பான முறையில் மகாலட்சுமி தாயாரின் அருள் என்பது நமக்கு கிடைக்கும்.

தொடர்புடைய செய்திகள்