2
திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள பாலத்தோப்பூர் பகுதியில் நோய்யாளர்கள் வாகனமும், கெப் வாகனமும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் நோய்யாளர்கள் வாகனம் வாய்க்காலுக்குள் வீழ்ந்துள்ளதுடன் இதில் வண்டியில் வந்த இருவர் காயமடைந்துள்ளார்.
இந்த விபத்து இன்று இடம்பெற்ற விபத்தில் கிளிவெட்டி பிரதேச வைத்தியசாலையின் நோய்யாளர்கள் வண்டி சாரதி மற்றும் வைத்தியசாலை ஊழியரும் படுகாயமடைந்து கிளிவெட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மூதூர் தள வைத்தியசாலையில் நோயாளிகளை விட்டுவிட்டு கிளிவெட்டி பிரதேச வைத்தியசாலையை நோக்கி வரும் வழியிலேயே இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.