ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் – யார் இவர்?

காணொளிக் குறிப்பு, ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் – யார் இவர்?

ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் – யார் இவர்?

இந்தியாவில் பெண் விளையாட்டு வீரர்களின் சாதனைகளைக் கொண்டாடுவதற்கும் கௌரவிப்பதற்கும் பிபிசியின் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை (ISWOTY) விருது ஐந்தாவது முறையாக வழங்கப்படவுள்ளது.

கடந்த 2024ஆம் ஆண்டுக்கான விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஐந்து வீராங்கனைகள்: கோல்ஃப் வீராங்கனை அதிதி அசோக், துப்பாக்கி சுடும் வீராங்கனைகள் மனு பாக்கர் மற்றும் அவ்னி லேகரா, கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா மற்றும் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட் ஆகியோர் விளையாட்டில் சிறப்பான பங்களிப்பை வழங்கியதற்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.

2023 அக்டோபர் 1ஆம் தேதி முதல் 2024 செப்டம்பர் 30ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் சிறந்து விளங்கிய ஐந்து இந்திய விளையாட்டு வீராங்கனைகளை தேர்வு குழுவினர் பரிந்துரைத்துள்ளனர்.

அனைவரும் தங்களுக்குப் பிடித்த விளையாட்டு வீராங்கனைக்கு வாக்களிக்க வரவேற்கப்படுகின்றனர். உங்கள் வாக்குகளை பிபிசியின் இந்திய மொழிகள் அல்லது பிபிசி ஸ்போர்ட் இணையதளங்களில் செலுத்தலாம்.

மனு பாக்கர்….

22 வயதாகும் இவர் ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் ஆவார். 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றார்.

கடந்த 2020 ஒலிம்பிக் போட்டியில் அவரது துப்பாக்கி செயலிழந்ததை அடுத்து, அவர் பதக்கத்தைத் தவறவிட்டார். அதன் பிறகு, அவரது நெடுநாள் பயிற்சியாளரான ஜஸ்பால் ரானாவுடன் இணைந்து 2024 ஒலிம்பிக் போட்டிக்கு பயிற்சி பெற்றார்.

கடந்த 2018ஆம் ஆண்டில், தனது 16 வயதில் உலகக்கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்ற இளம் இந்திய துப்பாக்கி சுடும் வீரர் என்ற வரலாற்றை உருவாக்கினார். மனு பல உலகக்கோப்பை போட்டிகளில் பதக்கங்களை வென்று குவித்துள்ளார்.

அர்ஜுனா விருதைப் பெற்ற மனு, 2021ஆம் ஆண்டில் பிபிசியின் வளர்ந்து வரும் வீராங்கனை விருதையும் பெற்றார். இவருக்கு 2025 ஜனவரி 17 அன்று இந்தியாவின் உயரிய விளையாட்டு விருதான கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு