U19WC 2025 இல் உறுதியான வெற்றிகளுடன் இந்தியா, இலங்கை!

by adminDev2

2025 ஐசிசி மகளிர் U19 உலகக் கிண்ணத்தின் 4 ஆம் நாள் முதல் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி இலங்கை இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.

இது புள்ளிகள் பட்டியலில் இந்தியாவை முந்திச் செல்ல உதவியது.

ஆனால், இந்தியா மலேசியாவை வீழ்த்தி தொடர்ந்தும் இரண்டாவது வெற்றியைப் பெற்றதால், முதலிடத்தை மீண்டும் பாதுகாக்க இந்தியாவுக்கு அதிக நேரம் ஆகவில்லை.

2025 ஐசிசி மகளிர் U19 உலகக் கிண்ணத்தின் குழுவில் ஏ இல் இந்தியா +9.148 நிகர புள்ளிகளுடன் முதல் இடத்திலும், இலங்கை +5.500 நிகர புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன.

கோலாலம்பூரில் நடைபெற்ற மேற்திந்தியத்தீவுகளுக்கு எதிரான போட்டியில் இலங்கை 81 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.

அதேநேரம், கோலாலம்பூரில் நடந்த மற்றொரு போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் மலேசியாவை வீழ்த்தியது.

நான்கு குழுக்களில் ஒவ்வொரு அணியும் தற்சமயம் பெரும்பாலும் இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்