நாமலை” நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் (எல்.ரீ.ரீ.ஈ ) முகநூல் பக்கத்தைப் பரப்பியதாகவும், இன நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் தகவல்களைப் பரப்பியதாகவும் கூறப்படும் சந்தேக நபரான “நாமல் குமார”வை எதிர்வரும் 23 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி நீர்கொழும்பு சிறைச்சாலை கண்காணிப்பாளருக்கு செவ்வாய்க்கிழமை (21) உத்தரவிட்டுள்ளார்.
அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் எச்.எஸ்.கே.ஜே. பண்டார தாக்கல் செய்த புகாரைத் தொடர்ந்து, சி.ஐ.டியின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு தாக்கல் செய்த புகாரை பரிசீலித்த பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த வழக்கில் நாமல் குமார சந்தேகநபராகப் பெயரிடப்பட்டு, இதேபோன்ற குற்றத்தைச் செய்ததற்காக கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதால், சந்தேக நபரை 23 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிடுமாறு குற்றப் புலனாய்வுத் துறை நீதிமன்றத்தைக் கோரியது.