by guasw2

அஸ்வசும இரண்டாம் கட்டம் விண்ணப்பித்தகவர்களின் வீடுகளுக்குச் சென்று தகவல்களைச் சேகரிக்கும் பணி ஆரம்பம் ! on Tuesday, January 21, 2025

அஸ்வசும நலன்புரிப் பலன்கள் திட்டத்தின் இரண்டாம் கட்ட கணக்கெடுப்பின் வெற்றியை உறுதி செய்வதற்காக, முன்கூட்டியே திட்டமிடப்பட்ட தயாரிப்பாக, நலன்புரி நண்மைகள் சபை திட்டமிட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

முதலில், மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களத்துடன் இணைந்து மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

அதன்படி, இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பை 3 கட்டங்களாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

ஜனவரி 6 ஆம் திகதி முதல் ஜனவரி 14 ஆம் திகதி வரை பிரதேச செயலகங்களில் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு முந்தைய நடவடிக்கைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டன, மேலும் ஜனவரி 15 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை மறு பரிசீலனை செயல்முறை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இறுதி கட்டமாக, அஸ்வசும உதவித்தொகையைப் பெறுவதற்காக விண்ணப்பங்களை சமர்ப்பித்தவர்களின் வீடுகளுக்குச் சென்று தகவல்களைச் சேகரிக்கும் பணி ஜனவரி 21 ஆம் திகதி முதல் ஜனவரி 31 ஆம் திகதி வரை இடம்பெற உள்ளது

தொடர்புடைய செய்திகள்